விடுதியில் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த 2 அதிகாரிகள் கைது..!!

share on:
Classic

இந்தியாவின் நாக்பூர் பகுதில் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த 2 அதிகாரிகள் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் நாக்பூர் பகுதியில் பழங்குடியினர் மாணவிகள் தங்கி படிப்பதற்க்காக விடுதி ஒன்று உள்ளது. அங்கு இரண்டு மாணவிகள் திடீரென மயக்க மடைந்து கீழே விழுந்தனர். அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவர்கள் அவர்களுக்கு சிகிச்சை அளித்த போது அவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து பழங்குடியினர் மாணவர்கள் விடுதியில் போலிஸ்சார் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது விடுதி கண்காணிப்பாளர் மற்றும் மற்றொரு அதிகாரியும் சேர்ந்து அந்த மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. உடனே அந்த அதிகாரிகள் இருவரையும் போஸ்கோ சட்டத்தின் கீழ் போலிசார் கைது செய்தனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் சில சிறுமிகள் அந்த விடுதியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. 

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan