நளினி பரோல் வழக்கு : தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..!

share on:
Classic

நளினி பரோல் வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி, தனது மகள் திருமணத்திற்காக 6 மாதங்கள் பரோல் வழங்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த மனு மீதான விசாரணைக்கு தானே நேரில் ஆஜராகி வாதிட அனுமதிக்க வேண்டும் என்றும் நளினி கோரியிருந்தார்.

இந்நிலையில், ஜூன் 11-ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அவரசமாக பரோல் தேவை என்றால் விடுமுறை கால நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற நளினிக்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan