குழந்தைள் விற்பனை விவகாரம் : 7 பேருக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு...

share on:
Classic

குழந்தைகள் விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள முருகேசன், பர்வீன், லீலா உள்ளிட்ட 7 பேருக்கு ஜூன் 6 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டித்து நாமக்கல் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் பச்சிளம் குழந்தைகள் விற்பனை தொடர்பாக, முருகேசன், அருள்சாமி, பர்வீன், ஹசீனா, லீலா, செல்வி, சாந்தி ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு நீதிமன்ற காவல் முடிவடைந்ததை அடுத்து, ஏழு பேரும் நாமக்கல் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். 
அவர்கள் அனைவருக்கும் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி வடிவேல் ஜூன் 6 ஆம் தேதிவரை நீதிமன்றக் காவலை நீட்டித்து உத்தரவிட்டார்.

News Counter: 
100
Loading...

Ragavan