நரேந்திர மோடி பிரதமராக தேர்வு..!

share on:
Classic

தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில் நரேந்திர மோடி பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

டெல்லியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் நாடாளுமன்ற மைய அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, தமிழக முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், பஞ்சாப் முதலமைச்சர் பர்காஷ் சிங் பாதல், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் நரேந்திர மோடி நாடாளுமன்றத் தலைவராக தேர்வு செய்யப்பட்டு பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு தேசிய ஜனநாயக் கூட்டணிக் கட்சி தலைவர்களான முதலமைச்சர் பழனிசாமி உள்ளிட்டோர் மலர்க்கொத்துகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். அப்போது, பிரதமர் மோடி மூத்த தலைவர் எல்.கே.அத்வானியின் காலைத் தொட்டு வணங்கி ஆசி பெற்றார்.

News Counter: 
100
Loading...

Ragavan