பிரதமர் மோடியை ஆட்சி அமைக்க வருமாறு குடியரசுத் தலைவர் அழைப்பு..!!

share on:
Classic

ஆட்சி அமைக்க வருமாறு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

தேசிய ஜனநாயக் கூட்டணிக் கட்சி தலைவர்கள் கூட்டத்துக்குப் பிறகு பிரதமர் மோடி குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தார். அப்போது, குடியரசுத் தலைவர் மோடியை பிரதமராக நியமித்து அதற்கான கடிதத்தை முறைப்படி அவரிடம் வழங்கினார். இதையடுத்து, ஆட்சி அமைக்குமாறு அழைப்பு விடுத்த குடியரசுத் தலைவர் அமைச்சரவைப் பட்டியலை வழங்குமாறு கூறினார். மேலும், பதவியேற்கும் தேதியை தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, எந்த தடைக் கற்களும் இல்லாமல் புதிய அரசு அமைக்க வாய்ப்பளித்த நாட்டு மக்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவிப்பதாகக் கூறினார். மேலும், அனைத்து மக்களின் கனவுகளும் எதிர்பார்ப்புகளும் நிறைவேற்றப்படும் என்று மோடி தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், நாடு தனக்கு மிகப்பெரிய உத்தரவை வழங்கியுள்ளது. அந்த உத்தரவு மக்களின் எதிர்பார்ப்புடன் வந்திருப்பதாகக் கூறினார்.

News Counter: 
100
Loading...

vinoth