"எதிர்கட்சிகளைப் போல் நாட்டு மக்களை சுரண்டவில்லை"

share on:
Classic

எதிர்க்கட்சித் தலைவர்களைப் போல் தன்னிடம் உள்ள பினாமி சொத்துகள் இருப்பதை நிரூபிக்க முடியுமா என பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.

7ம் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ளன. 7ம் கட்ட தேர்தலில் போட்டியிடும் உத்தரபிரதேச மாநிலம் பால்லியா தொகுதி பா.ஜ.க வேட்பாளரை ஆதரித்து பிரதமர் மோடி பரப்பரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், பா.ஜ.க ஒரு ஊழல் கட்சி என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பொய் குற்றச்சாட்டுகளை பரப்பு வருவதாக கூறினார். 

ஊழல் ஆட்சி என விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள், தன்னிடம் பினாமி சொத்துகள் இருப்பதை நிரூபிக்க முடியுமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார். எதிர்க்கட்சித் தலைவர்களைப் போல் நாட்டு மக்களை சுரண்டி அதிகளவு சொத்துக்கள் தன்னிடம் இல்லை என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

 

News Counter: 
100
Loading...

aravind