பார்ஸலை தொட்ட நீ கெட்ட.. விழிபிதுங்கும் திருடர்கள்..!

share on:
Classic

ஆன்லைன் பார்சல் திருடர்களை கையும் களவுமாக பிடிக்கும் நாசா என்ஜினீயரின் புதிய கண்டுபிடிப்பு .

ஆன்லைன் ஷாப்பிங் அதிகமாகி விட்ட இந்த காலத்தில், உரிமையாளர் வர லேட்டாகும் பட்சத்தில் அனாதையாக விடப்பட்ட பார்சல்கள் திருடப்படுவதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. இதனை தடுக்க நினைத்த நாசா என்ஜினீயர் ஒருவர், வியக்கவைக்கும் டெக்னாலஜியை கண்டுபிடித்துள்ளார். 'மார்க் ராபர்' என்னும் அவர் தனது  YOUTUBE சேனலில் இதை வெளியிட்டுள்ளார். இது தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது.

மார்க்கின் பார்சல் ஒருநாள் காணாமல் போக, காண்டான அவர் போலீசில் புகார் தெரிவித்தார். அவர்கள் கைவிரித்து விட, 6 மாதம் தாமாகவே முயன்று இதை கண்டுபிடித்துள்ளார். பார்சலில் அட்டாச் செய்யப்படும் சிறிய மோட்டர், திருடர்கள் யாரவது கைவைத்தால், உடனே வெடித்து மினுமினுப்பான ஜிகினா போன்ற பொருளை வெளியேறி பயமுறுத்தும். மேலும் பார்ஸல்களில் வைக்கப்பட்டுள்ள Accelerometer கொடுக்கும் GPS சிக்னல்கள் மூலம் பார்சல் எங்கு உள்ளது என்பதையும் கண்டுபிடித்துவிடலாம். 

மார்க்கின் இந்த வீடியோவில், கைவிடப்பட்ட ஒரு  பார்சலை திருட வரும் திருடர்கள், அதை  தொட்டவுடன் வரும் மாற்றங்களால் விழிபிதுங்கி நிற்கும் காட்சிகள் அனைவரையும் சிரிக்க வைக்கின்றன. நாசா 'டெக்கியின்' இந்த கண்டுபிடிப்பு பார்சல் திருடர்களை நடுக்கத்தில் ஆழ்த்தியுள்ளது .   

News Counter: 
100
Loading...

sasikanth