திடீர் மயக்கம்... ஆஸ்திரேலிய வீரர் கூல்ட்டர் நைல் மருத்துவமனையில் சேர்ப்பு

share on:
Classic

பரபரப்பான கிரிக்கெட் போட்டியின் போது பவுலர் கூல்ட்டர் நைல் மயங்கி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

இந்தியாவில் ஐ.பி.எல். எந்தளவு பிரபலமோ அதே போன்று ஆஸ்திரேலியாவில் பி.பி.எல். எனப்படும் ’பிக் பாஷ் லீக்’ டி20 கிரிக்கெட் தொடர் பிரபலம்.  இத்தொடரில் நடைபெற்ற போட்டி ஒன்றில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியும், அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியும் மோதின. இதில், 12 பந்துகளில் 8 ரன்கள் எடுத்தால் அடிலெய்டு அணி வெற்றி பெற்று விடும் என்ற நிலையில், பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிக்காக தனது கடைசி ஓவரை நாதன் கூல்ட்டர் நைல் வீசினார். அப்போது, திடீரென தலைசுற்றி பிட்ச் மீது அமர்ந்தார் நைல். இதையடுத்து அவசர அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நைலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 

இதுகுறித்து பேசிய ஸ்கார்ச்சர்ஸ் அணியின் ’ஃபிசியோ’ கிறிஸ் கியூனெல், நைல் கீழே சரிந்து விழுந்ததற்கு அவருக்கு ஏற்பட்ட திடீர் தலைசுற்றலே காரணம் என தெரிவித்தார். 

அடுத்த வாரம் இந்தியா வரவுள்ள ஆஸ்திரேலிய அணி 5 ஒருநாள் மற்றும் 2 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இதற்கான ஆஸ்திரேலிய அணியில் நைலும் இடம்பிடித்துள்ளார். இந்நிலையில் அவருக்கு ஏற்பட்டுள்ள திடீர் உடல்நலக் கோளாறு ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. 

Nathan Coulter-Nile collapsed due to a bad bout of vertigo in @ScorchersBBL final game of the season but the doc says he'll be fine. @10NewsFirstPER #BBL08 pic.twitter.com/GA4XWGmFbr

— Steve Allen (@ScubaStv) February 9, 2019

News Counter: 
100
Loading...

mayakumar