முத்தலாக் மசோதா, தேசிய மருத்துவ ஆணைய மசோதாக்கள் மீண்டும் தாக்கல்..?

share on:
Classic

தேசிய மருத்துவ ஆணைய மசோதா, முத்தலாக் மசோதா மக்களவையில் மீண்டும் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மக்களவையின் முதல் கூட்டத்தொடரில் தேசிய மருத்துவ ஆணைய மசோதா, முத்தலாக் மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்படவுள்ளது. தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பது உள்ளிட்ட சீர்திருத்தங்களுக்கு வழிவகுக்கும் தேசிய மருத்துவ ஆணைய மசோதா, கடந்த 2017-ஆம் ஆண்டு மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல் முத்தலாக் கூறி விவாகரத்து பெறும் கணவர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என அவசர சட்டம் இயற்றப்பட்டு, இந்த சட்டம் பலமுறை நீடிக்கப்பட்டது. இஸ்லாமிய பெண்கள் பாதுகாப்பு சட்டம் என்ற மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த இருமசோதாக்குளும் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு மாநிலங்களவையில் நிலுவையில் உள்ளது. நாடாளுமன்ற விதிப்படி, மக்களவை கலைக்கப்பட்டு புதிய உறுப்பினர்கள் பதவியேற்று கொண்டதால் இந்த இரு மசோதாக்களும் காலாவதி ஆகிவிட்டது.

இந்த நிலையில், ஜூன் 17-ம் தேதி தொடங்கும் புதிய மக்களவையில் மீண்டும் இரு தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது. அதேபோல், முத்தலாக் மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்படும் என மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

 

News Counter: 
100
Loading...

Ragavan