தேசிய ஓய்வூதிய திட்டத்தில் முன்கூட்டியே பணத்தை திரும்பப் பெறலாம்..

share on:
Classic

தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் (National Pension Scheme) ன்கூட்டியே பணத்தை திரும்பப் பெற மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

மூன்று பகுதிகளாக பணத்தை பெறலாம்:
அவசர தேவை ஏதேனும் இருந்தால் மூன்று பகுதிகளாக பணத்தை பெறலாம் என்றும், பணத்தை திரும்பப் பெறும் ஒவ்வொரு முறையும் அந்த தொகை மொத்த பங்களிப்பின் தொகையிலிருந்து 25 சதவீதத்தை மிகாமல் இருக்க வேண்டும் எனவும் மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

 

தேசிய பென்சன் திட்டத்தின் இரண்டு திட்டங்கள்:
தேசிய பென்சன் திட்டத்தில் அரசு இரண்டு வகையான திட்டங்களை வழங்கி உள்ளது. ஒன்று ஓய்வூதிய திட்டம், மற்றொன்று சேமிப்பு திட்டம். ஆகஸ்ட் 10 2017-ம் ஆண்டிற்கு பின் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்தவர்கள் 3 வருடங்களுக்கு பிறகு மூன்று பகுதிகளாக பணத்தை திரும்பப் பெறலாம். இதற்கு முன்னால் இந்த திட்டத்தில் பணத்தை திரும்பப் பெற தாங்கள் சேர்ந்த தேதியிலிருந்து 10 வருடம் வரை காத்திருக்க வேண்டும்.

கட்டாய இடைவெளி நீக்கம்:
ஓய்வூதிய திட்டத்தில் இரண்டு பகுதிகளாக பணத்தை திரும்பப் பெற முன்னர் இருந்த 5 வருட கட்டாய இடைவெளியை மத்திய அரசு நீக்கியுள்ளது. எனவே ஓய்வூதிய திட்டத்தில் பணத்தை எடுக்க விரும்புபவர்கள் 5 வருடம் காத்திருக்க தேவை இல்லை. ஓய்வூதிய திட்டத்தில் உள்ளவர்கள் தங்களது அவசர பணத்தேவைக்காக பணத்தை திரும்பப்பெற சாத்தியமாக்கும் வகையில் இந்த முயற்சியை மேற்கொண்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

News Counter: 
100
Loading...

youtube