’நட்பே துணை’ படத்தின் சிங்கிள் பசங்க பாடல் வெளியீடு..!!

share on:
Classic

நட்பே துணை படத்தின் சிங்கிள் பசங்க பாடல் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.

மீசைய முறுக்கு படத்தின் வெற்றியை தொடர்ந்து இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி ஹீரோவாக நடித்துள்ள படம் தான்  நட்பே துணை. அறிமுக இயக்குனர் பார்த்திபன் தேசிங்கு இயக்கியிருக்கும் இந்த படத்தை அவ்னி மூவிஸ் நிறுவனம் மூலம் சுந்தர் சி தயாரித்துள்ளார்.

நட்பே துணை படத்தில் ஆதியுடன் இணைந்து யூடியூபில் பிரபலங்களான ஆர்ஜே விக்னேஷ்காந்த், எருமை சானி புகழ் விஜய் ,ஷா ரா  நடிக்க .கரு.பழனியப்பன்,கௌசல்யா,ஹரிஷ் உத்தமன் போன்ற சீனியர் நடிகர்களும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மிக பெரிய எதிர்பார்ப்போடு கடந்த 4ஆம் தேதி வெளியான இந்த படம் பல கோடி வசூல் செய்துள்ள நிலையில் இந்த படத்தில் அதிகம் ரசிக்கப்பட்ட சிங்கிள் பசங்க பாடலின் விடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. வெளியான கொஞ்ச நேரத்தில் இந்த பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
 

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan