மூட்டு வலியை குணப்படுத்தும் இயற்கை மருத்துவம்..!!

share on:
Classic

மூட்டு வலியானது 40 வயது கடந்தவர்களை பெரிதும் பாதிக்கிறது. மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்திகள் குறைவதன் மூலம் இதுபோன்ற மூட்டு வலிகள் ஏற்படுகிறது.

வயது அதிகரிக்கும் போது முழங்கால் மூட்டுகள் தேய்மானம் அடைந்து வலி உண்டாகிறது. இதில் இருந்து விடுபட மருந்துகளை உட்கொள்வதை விட இயற்கையான தயாரிக்கப்பட்ட கூல்டிரிங்ஸ் மூலம் இதை எளிதில் குணப்படுத்தலாம். இந்த இயற்கை பானத்தை தயாரிக்கும் முறைகளை காணலாம்.

தேவையான பொருட்கள் :
அன்னாசி துண்டுகள் - 2 கப்
தேன் - 2 1/2 டேபிள் ஸ்பூன்
ஆரஞ்சு ஜீஸ் - 1கப்
ஓட்ஸ் - 1 கப்
பாதாம் - 2 1/2 டேபிள் ஸ்பூன்
பட்டை தூள் - 1 டீஸ்பூன்
தண்ணீர் - 1 கப்

செய்முறை :
ஓட்ஸை வேகவைத்து தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு அன்னாசிப் பழத்தை அரைத்து சாறு எடுத்து அந்த சாற்றினை தனியாக எடுத்து வைத்த ஓட்ஸ்சுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் பாதாமை சேர்க்க வேண்டும். பின்பு மிக்ஸியில் ஆரஞ்சு ஜீஸ்,தேன், தண்ணீர் மற்றும் பட்டைத்தூள் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதில் ஓட்ஸை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். இப்போது சுவையான கூல்டிரிங்ஸ் ரெடி. இதை செய்து தினமும் குடித்து வந்தால் முற்றிலும் மூட்டு வலி நீங்கும். 

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan