நவ்ஜோத் சிங் சித்து பேசும் திறனை இழக்கும் அபாயம்!!!

share on:
Classic

தேர்தல் பிரச்சாரத்தில் தொடர்ந்து ஈடுபட்டதால் பஞ்சாப் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து பேசும் திறனை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் நட்சத்திர பேச்சாளரான சித்து, ராஜஸ்தான், சத்தீஷ்கர், மத்திய பிரதேசம் மற்றும் தெலங்கானா சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தில் அனல் பறக்க பேசினார். 17 நாட்கள் தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டதால் அவரது தொண்டை பாதிக்கப்பட்டது. நிலைமை மோசமானால், அவர் பேசும் திறனை இழக்க கூடிய நிலைக்கும் செல்லலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

News Counter: 
100
Loading...

youtube