சத்தீஸ்கரில் நக்சல்கள் நடத்திய வெடிகுண்டு தாக்குதல் - 5 பேர் பலி

share on:
Classic

சத்தீஸ்கர் மாநிலத்தில் பேருந்தை குறிவைத்து நக்சல்கள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் சி.ஐ.எஸ்.எப். வீரர் உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சத்தீஸ்கர் மாநிலம், தண்டேவாடா மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள சி.ஐ.எஸ்.எப். வீரர்கள், மார்கெட்டிற்கு சென்று தனியார் பேருந்தில் முகாமுக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். 

அவர்களது பேருந்து பசெலி என்ற இடத்தில் வந்தபோது, நக்சல்கள் வெடிகுண்டை வெடிக்கச் செய்து தாக்குதல் நடத்தினர். 

சி.ஐ.எஸ்.எப். வீரர்களை குறிவைத்து நடத்தப்பட்ட இத்தாக்குதலில், சி.ஐ.எஸ்.எப். வீரர் மற்றும் பொதுமக்கள் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

மேலும் பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து அந்த பகுதியில் வீரர்கள் தீவிரமான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

கடந்த 9 நாட்களில் மாவோயிஸ்ட்கள் நடத்தும் 2வது தாக்குதல் இதுவாகும். 

கடந்த 30ம் தேதி நடந்த தாக்குதலில் தூர்தர்சன் ஒளிப்பதிவாளர் உட்பட 4 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

News Counter: 
100
Loading...

aravind