ஜெட் ஏர்வேஸ் இயக்குநர் குழுவிலிருந்து விலகிய நசிம் ஜைதி..!!

share on:
Classic

ஜெட் ஏர்வேஸ் இயக்குநர் குழுவிலிருந்து நசிம் ஜைதி விலகுவதாக தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதனால் கடும் நிதி நெருக்கடியின் காரணமாக, ஜெட் ஏர்வேஸின் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தற்போது இந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவன இயக்குனர் குழுவிலிருந்து நசிம் ஜைதி விலகுவதாக தெரிவித்துள்ளார். இவர் முன்னாள் விமானப் போக்குவரத்து செயலராகவும், முன்னாள் தேர்தல் ஆணையராகவும் இருந்துள்ளார். கடந்த வருடம் இந்த குழுவில் இணைந்த இவர் தற்போது தனிப்பட்ட காரணத்திற்காக விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan