டெல்லியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை கூட்டம்..!

share on:
Classic

டெல்லியில் இன்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெருவாரியான வெற்றி பெற்று ஆட்சியமைக்கிறது. தொடர்ந்து இரண்டாவது முறையாக மோடி பிரதமராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில், இன்று மாலை  5 மணியளவில் தேசிய ஜனநாயக கட்சியின் மக்களவைக் குழு கூட்டம் டெல்லியில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில், புதிய அமைச்சரவை குறித்தும், அமைச்சரவையில் கூட்டணி கட்சியினருக்கு இடம் தருவது குறித்தும் விவாதிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

இதில், தேர்தலில் வெற்றி பெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி மக்களவை உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்திலேயே அனைவரும் சேர்ந்து நரேந்திர மோடியை தலைவராக தேர்வு செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

News Counter: 
100
Loading...

aravind