இந்தியா அனைத்து மதங்களுக்கும் சமமானது என்று 75% இந்துக்கள் நம்புகின்றனர் : ஆய்வில் தகவல்

share on:
Classic

இந்திய நாடு அனைத்து மதங்களுக்கும் பொதுவானது என்று சுமார் 75% இந்துக்கள் கருதுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. 

வளரும் சமூகங்களுக்கான ஆய்வு மையம் என்ற அமைப்பு (Centre for Studies for Developing Societies) தற்கால அரசியல் சூழலில், சமூக ஊடகங்கள் மற்றும் ஸ்மார்போன்கள் எந்தளவு வாக்காளர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று ஆய்வு நடத்தியது. நாடு முழுவதும் 26 மாநிலங்களில் உள்ள 211 நாடாளுமன்ற தொகுதிகளில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. மொத்தம் 24,236 வாக்களர்கள் இந்த ஆய்வில் கலந்துகொண்டனர்.  அந்த ஆய்வு முடிவுகள் நேற்று வெளியானது.

இந்தியா இந்துக்களுக்கு மட்டுமே சொந்தமானது என்று சமூக வலைதளங்கள் பயன்படுத்தும் 17% இந்துக்கள் கூறியுள்ளனர். இதே கருத்தை சமூக வலைதளங்களை பயன்படுத்தாதவர்களில் 19% பேரும் தெரிவித்துள்ளனர். அதேபோல் நாடு அனைத்து மதங்களுக்கும் பொதுவானது என்று சமூக ஊடகங்களை பயன்படுத்ததாத 73% இந்துக்கும், அதனைப் பயன்படுத்தும் 75% பேரும் தெரிவித்துள்ளனர். 

இந்தியா இந்துக்களுக்கு மட்டுமே சொந்தம் : 

பேஸ்புக் : 22%

டிவிட்டர் : 20%

வாட்ஸ் ஆப் : 17%

இன்ஸ்டாகிராம் : 19%

யூ டியூப் : 18%

 

இந்திய நாடு அனைத்து மதங்களுக்கும் பொதுவானது :

பேஸ்புக் : 77%

டிவிட்டர் : 74%

வாட்ஸ் ஆப் : 78% 

இன்ஸ்டாகிராம் : 74%

 யூ டியூப் : 77%

 

 

News Counter: 
100
Loading...

Ramya