நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியீடு..!

share on:
Classic

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை இன்று முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு மே 5-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஹால் டிக்கெட்டை இன்று முதல் இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நீட் தேர்வை எழுதுவதற்காக நாடு முழுவதும் 15,19,000 பேரும், தமிழகத்தில் 1,40,000 பேரும் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான தேர்வுகள் தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், மதுரை, சேலம், திருச்சி உள்ளிட்ட 14 நகரங்களில் நடைபெற உள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan