நிலவறிந்த நீல் ஆம்ஸ்ட்ராங்

share on:
Classic

மனிதன் கற்பனையாய் எண்ணியிருந்த  எல்லைகள் பல கடந்து , நிலவில் கால் பதித்ததன் மூலம் காலங்கள் கடந்தும் வரலாறாய் நிலைத்திருப்பவர் நீல் ஆம்ஸ்ட்ராங்.

எளிமையான ஆடிட்டர் தந்தையின் மூத்த மகனாக 1930-ம் ஆண்டு ஆகஸ்ட்-5ம் தேதி ஒகயோவில் உள்ள வபாகொனெட்டா பகுதியில் பிறந்தார் நீல் ஆம்ஸ்ட்ராங்.  தனது ஆறாவது வயதில்  தந்தையுடன் முதல் வாண்வெளி பயணத்தை மேற்கொண்டார். இந்த பயணம்  அவருக்குள் ஏற்படுத்திய ஆர்வம், ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு முன்பே, தனது 15-வது வயதில் விமானத்தை இயக்கும் சான்றிதழ் பெற்றார்.  இதையடுத்து  பர்ட்யூ பல்கலைக்கழகத்தில் 1947ம் ஆண்டு ஏரோஸ்பேஸ் என்ஜினியரிங்கில் பட்டம் பெற்றார்.

 

1949-ம் ஆண்டு அமெரிக்க கடற்படையில் இணைந்த இவர் , 1950ம் ஆண்டு கொரியாவுடனான யுத்தத்தின்போது அமெரிக்க கடற்படை ஜெட் வீரராக செயல்பட்டார்.  இதையடுத்து ஆரம்ப கட்டத்தில் இருந்த அமெரிக்க வானூர்தி சோதனைக்குழுவில் உறுப்பினராக இணைந்தார்.  வானூர்திகளின் அடுத்த கட்ட முன்னேற்றங்கள், அவற்றை சோதிக்கும் சோதனை பைலட் என அனைத்து வகையான வேலைகளிலும் ஈடுபட தொடங்கினார். இதே சமயத்தில் விண்வெளி தொடர்பான ஆராய்ச்சிகளும் அமெரிக்காவில் வேகமெடுக்க தொடங்கியிருந்தது.

அதன்படி விண்வெளி பயணத்திற்கான கலன்களை தயாரிக்கும் பணிகளும் இவர் சார்ந்த குழுவுக்கே வந்தடைந்தது. 1960-ம் ஆண்டு முழுமையாக நாசா குழுவில் இணைந்த இவர், நாசா ஆராய்ச்சி நிலையத்திற்காக உருவாக்கப்பட்ட அதிவேக விமானமான 4000-மைல் எக்ஸ் -15 -ன் திட்ட பைலட்டாக செயல்பட்டார். இதுமட்டுமின்றி ஜெட், ராக்கெட், கிளைடர்கள் என 200-க்கும் மேற்பட்ட புதிய கண்டுபிடிப்புகளை முதலில் இயக்கிய விமானியாகவும் செயல்பட்டார். அதுவரை வானூர்திகளின் கட்டமைப்புகளை ஆராய்ந்து வந்த ஆம்ஸ்ட்ராங், 1962 இல் விண்வெளி வீரர் நிலைக்கு மாற்றப்பட்டார். அதே சமயம் உலக அளவில் ரஷ்யாவும், அமெரிக்காவுக்கு ஈடாக பல முயற்சிகளை மேற்கொண்டிருந்தது. 

இந்த போட்டியில் முதலாவது என்ற இடத்தை பிடிப்பதற்காக ஜான் எப். கென்னடி தலைமையிலான அமெரிக்க அரசு, 1967-ம் ஆண்டு பிப்ரவரி-21 -ம் தேதி  மேற்கொண்ட முதல் முயற்சி தோல்வியில் முடிந்தது. இந்த பயணத்தில் பங்கேற்ற மூன்று வீரர்களும் பலியாயினர். இதனால் அமெரிக்க அரசு அடுத்த திட்டம் தோல்வி அடைய கூடாது என்ற நோக்கத்தில் சிறிது நிதானமாக செயல்பட தொடங்கியது. அடுத்த அப்போலோ-11 என்ற திட்டத்தின் கட்டமைப்பிற்காக 2 ஆண்டுகளை எடுத்து கொண்டது.

இந்த முறை சரியான திட்டத்துடன் மட்டுமல்லாமல், சரியான வீரர்களுடனும் களமிறங்க எண்ணியது நாசா. சுமார் 24 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற பிரம்மாண்ட பொருட்செலவில் உருவான திட்டத்தில்,  நீல் ஆம்ஸ்ட்ராங், எட்வின் ஆல்ட்ரின், மைக்கேல் கொலின்ஸ் ஆகிய மூவரை  விண்வெளிக்கு அனுப்ப தேர்வு செய்தது. இதையடுத்து அமெரிக்கா மட்டுமின்றி, ஒட்டு மொத்த உலகமும் எதிர்பார்த்திருந்த அந்த நாள் வந்தடைந்தது. அதன்படி 1969ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி,  நீல் ஆம்ஸ்ட்ராங், எட்வின் ஆல்ட்ரின், மைக்கேல் கொலின்ஸ் ஆகிய மூன்று  விண்வெளி வீரர்களுடன்,  தனது  பயணத்தைத் தொடங்கியது  அப்போலோ 11 விண்கலம்.

சுமார் 102 மணி நேரம் 45 நிமிடம் 39 விநாடிகள் நீடித்த நெடுந்தூர பயணத்தின் இறுதியாய், 1969ம் ஆண்டு ஜூலை மாதம் 20ம் தேதி அப்போலோ விண்கலம் நிலவில் இறங்கியது. நாம் அனைவரும் நினைப்பது போல ஆம்ஸ்ட்ராங் முதலில் நாசாவால் தரையிறங்க திட்டமிடவில்லை.  எட்வின் சி ஆல்ட் ரின் தான் முதலில் தரையிறங்க கட்டளையிடப்பட்டிருந்தது. அவர்தான் நிலவுக்கு சென்ற அப்பல்லோ விண்கலத்தின் பைலட் . ஆல்ட்ரின் அமெரிக்காவின் விமானப் படையில் பணிபுரிந்தவர். மேலும் விண் நடை அனுபவம் உள்ளவர். அதனால் அவர் விமானியாக நியமிக்க ப்பட்டார். நீல் ஆம்ஸ்ட்ராங்க் அமெரிக்காவின் கப்பல் படையில் வேலை பார்த்தவர். மிகுந்த தைரியசாலி என்பதால்தான் இந்த பயணத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் கோ-பைலட் அதாவது இணை விமானி. இவர்கள் சென்ற அப் பல்லோ விண்கலம் நிலவை அடைந்ததும் நாசாவிலிருந்து பைலட் ஃபர்ஸ்ட் என்று கட்டளை பிறப் பிக்கப்பட்டது. ஆனால் ஆல்ட் ரினுக்கோ மனதில் சின்ன தயக்கம். ‘நிலவில் முதன் முதலில் கால் எடுத்து வைக்கிறோம். ஈர்ப்பு விசையற்ற இடத்தில் இருக்கிறோம். கால் வைக்கும் இடம் எப்படி இருக்கும் என்று தெரியாது. புதை மணலாக இருந்து உள்ளே இழுத்துவிட்டால் எரி மணலாக இருந்து காலை சுட்டு விட்டால் தயக்கத்தில் மணிக்கணக்காக தாமதிக்கவில்லை. சில நொடிகள் தான் தாமதித்திருப்பார். அதற்குள் நாசாவில் இருந்து இரண்டாவது கட்டளை பிறப்பிக்கப்பட்டது. கோ பைலட் நெக்ஸ்ட் நீல் ஆம்ஸ்ட்ராங் என கட்டளை வந்த அடுத்த நொடி காலடி எடுத்து வைத்தார். ஒரு நொடி தயக்கத்தில் மாற்றி எழுதப் பட்ட உலக வரலாறு! (நியூயார்க் நேரப்படி) இரவு 10.50 மணிக்கு நிலவில் கால் வைத்தார்.

அதன் மூலம் நிலவில் கால் வைத்த முதல் மனிதன் என்ற பெருமையை அவர் பெற்றார். இவர் நிலவில் காலடி எடுத்துவைக்கும் போது முதலில் இடது காலையே வைத்தார். அவரைத் தொடர்ந்து 19 நிமிடங்கள் கழித்து ஆல்ட்ரின் காலடி எடுத்து வைத்தார். அவர்கள் காலடி வைத்த இடம் "அமைதித் தளம்" (Tranquility Base) என அழைக்கப்படுகிறது. அதில்,ஆம்ஸ்ட்ராங் 2 மணி 34 நிமிடங்களும், ஆல்டரிங் 1 மணி 33 நிமிடங்களும் நிலவில் ஆராய்ச்சிக்காக செலவளித்தனர். அப்போது, ஆராய்ச்சிக்கான மாதிரிகள் சேகரித்ததுடன், பல புகைப்படங்களையும் எடுத்தனர். நிலவில் இறங்கியதும் விண்வெளி வீரர்கள் பேசிய முதல் வார்த்தை ’அல்ட்ரின் காண்டாக்ட் லைட்’ என கூறப்படுகிறது. ஆனால், நாசா அதிகாரபூர்வமாக கூறியுள்ள அறிக்கையில், ‘Thats One Small for Man, One Giant for Mankind' என்ற வாக்கியத்தை தான் ஆம்ஸ்ட்ராங் முதலில் கூறினார் என தெரிவித்துள்ளது.

நிலவுப் பயணத்தை முடித்துக் கொண்டு ஜூலை 20, 1969 திரும்புவதற்கு முன்பு நிலவில் எட்வின் ஆல்ட்ரினும், நீல் ஆம்ஸ்ட்ராங்கும் அமெரிக்க கொடியை நாட்டினர். அப்போது அவரது சாதனையை உலகம் முழுவதிலும் இருந்து 5 கோடியே 28 லட்சம் மக்கள் கண்டு வியந்தனர். தொலைக்காட்சி இல்லாதவர்கள் ரேடியோவில் அந்த செய்தியைக் கேட்டு மகிழ்ந்தனர். நிலவில் ஆம்ஸ்ட்ராங் மற்றும் ஆல்ட்ரிங் மொத்தம் 21 மணி 36 நிமிடங்கள் 21 வினாடிகள் தங்கியிருந்தனர். நான்கு நாள் நிலவுப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு பூமிக்குத் திரும்பியது அப்பல்லோ விண்களம். உலகமே வியந்து போய் நின்ற நேரம் அது.

 

நிலவில் இருந்து பூமி திரும்பிய நீல் ஆம்ஸ்ட்ராங் நாசாவின் விண்வெளி மையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் காற்று மண்டலம் அல்லாத சந்திரனில் தான் எடுத்து வைத்த முதல் காலடி, குழந்தை தவழ்வது போன்று மகிழ்ச்சியாக இருந்தது என பெருமை பொங்க தெரிவித்தார். அந்த தருணம் குறித்து எட்வின் ஆல்ட்ரின் கூறுகையில், மிகப் பெரிய நிகழ்வு அது. பெருமைக்குரிய தருணம் அது என கூறினார். அதில் பயணித்த மைக்கேல் காலின்ஸ், “இந்த நிலவு பயணத்திற்காக உழைத்த அனைத்து அமெரிக்கர்களுக்கும் நன்றி என்றார். அவர்கள் அனைவரும் தங்களின் கடமையை சிறப்பாக செய்ததால்தான் இந்தப் பயணம் வரலாற்று சிறப்பு மிக்கதாக அமைந்தது” எனத் தெரிவித்தார். 

நிலவில் இருந்து பூமிக்கு திரும்பிய ஆம்ஸ்ட்ராங் உலக ஹீரோவானார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் தனது சொந்த ஊருக்கு சென்றபோது அங்கு அவரைப் பார்க்க 50,000 பேர் கூடியிருந்தனர். அவரது சொந்த ஊரில் மொத்தம் 9,000 பேர் தான் வசித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. விண்வெளி வைரஸ் பாதிப்பு ஏதேனும் அவர்களுக்கு உள்ளதா என பரிசோதிக்க அவர்கள்  மூன்று பேரும் மூன்று வாரங்களுக்கு தனி அறையில் சோதனைகளுக்கு அனுமதிக்கப்பட்டனர். அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சன் அவர்களை பார்வையிட சென்றபோது, அறையின் கண்ணாடி ஜன்னல் வழியாக அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். வின்வெளி பயணத்தின் போது நீல் ஆர்ம்ஸ்ட்ராங்கின் அனிந்திருந்த ஸ்பேஸ் சூட் பிளேடெக்ஸ் மூலம் தயாரிக்கப்பட்டது. 

அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சியில் சிறந்த நாடு என சொல்லி வந்த சமயத்தில் நிலவில் இறங்கி நீள் ஆம்ஸ்ட்ராங் வலம் வந்த படத்தை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்துப் பார்த்து சில திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டார்கள். அவர்கள் சொன்னது என்னவென்றால், நீள் ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை என்பது தான். அவர்கள் எழுப்பியுள்ள கேள்விக்கு இன்று வரை விடை தெரியாமல் உள்ளது

அதில் முதலாவது பூமியைச் சுற்றியுள்ளதாகக் கருதப்படும் வான் ஆலென் பெல்ட். பூமியின் மேற்பகுதியில் 500 கிலோமீட்டரில் தொடங்கி 36,000 கிலோமீட்டர் வரை பரவியிருக்கும் ஒரு வளையத்தின் பெயரே வான் ஆலென் பெல்ட். இன்னர் பெல்ட் மற்றும் அவுட்டர் பெல்ட் என்று இரண்டு பகுதிகளைக் கொண்ட இதில் நம்மால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத அளவிலான கதிரியக்கம் கசிந்து கொண்டிருக்கிறது. பூமியின் மின்காந்தப் புலத்தினால் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும் இந்த பெல்ட் தான் பூமிக்கு ஏற்படவிருந்த, இனி ஏற்படவிருக்கும் பல ஆபத்துக்களிலிருந்து பூமியைக் காப்பாற்றி வருவதாகத் தகவல். இந்த பெல்ட்டைத் தாண்டி விண்வெளி சார்ந்த பொருட்கள் எப்படி பூமியை அணுக முடியாதோ அதே போல பூமியின் மேற்பரப்பில் இருந்தும் இந்த வான் ஆலென் பெல்ட்டைத் தாண்டி எந்த பொருளும் பூமிக்கு வெளியே செல்லவும் வாய்ப்பில்லை என்று கருதப்படுகிறது.

ஒருவேளை மனிதர்கள் இந்த வான் ஆலென் பெல்ட்டைத் தாண்டிச் சென்றிருந்தால் அவர்கள் அந்தப்பகுதியில் நீடிக்கும் அதிகப்படியான ரேடியேஷனில் சிக்கி உயிரிழந்திருக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும் போது மூன் லேண்டிங் அதாவது நிலாவில் மனிதன் காலடி பதித்திருப்பது என்பது நம்ப முடியாத விஷயமாகவே கருதப்படுகிறது.

மனிதன் நிலவில் கால் பதித்தது பொய் என்று மெய்பிக்கச் சொல்லப்படும் மற்றொரு ஆதாரம், அமெரிக்காவின் நிலவுப் பயணம் என்பது ஸ்டான்லி குப்ரிக் எனும் இயக்குனரை வைத்து ஹாலிவுட் ஸ்டுடியோவில் எடுக்கப்பட்ட திரைப்படம் எனும் குற்றச்சாட்டு. ஸ்டுடியோவில் எடுக்கப்பட்டதால் தான் அந்த விடியோவில் மனிதனின் முதல் நிலவுப் பயணத்தின் போது வானத்தில் ஒரு நட்சத்திரம் கூட தட்டுப்படவில்லை போலும் என்று குற்றம் சுமத்துவோர் பலர் உண்டு. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா இதற்கெனவே தனியாக ஒரு மென்பொருளை உருவாக்கி மனிதன் நிலவுக்குச் சென்றது உண்மை போன்றதொரு தோற்றத்தை உருவாக்க கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் வேலையில் ஈடுபட்டது என்ற குற்றச்சாட்டும் உண்டு.

அடுத்த காரணம் நிலவில் வெளிச்சம் பெறுவதற்கான ஒரே சோர்ஸ் சூரியன் மட்டுமே எனும்போது நிலவில் இருக்கும் பொருட்களின் நிழல் ஒரே திசையில் மட்டுமே விழக்கூடும். ஆனால், அமெரிக்கா சமர்பித்த மூன் லேண்டிங் விடியோவில் இடம்பெறும் பொருட்கள் அனைத்தின் நிழலுமே ஒன்றுக்கொன்று தொடர்பின்றி வித்யாசமான கோணத்தில் விழுந்திருந்தன. விமர்சகர்கள் அமெரிக்காவின் மூன் லேண்டிங் பித்தலாட்டத்தை சுட்டிக்காட்ட நிழல்களின் திசை மாற்றத்தையும் ஒரு காரணமாக முன்வைக்கின்றனர்.

அடுத்ததாக காற்றே இல்லாத நிலவில் அமெரிக்காவின் கொடி அசைவது எவ்வாறு சாத்தியம் என்ற குற்றச்சாட்டும் எழுப்பப்பட்டது. அடுத்த காரணம் மூன் லேண்டிங் புகைப்படங்களில் தென்படக்கூடிய கூட்டல் குறிகள். நிலவுக்குச் செலுத்தப்பட்ட அப்பல்லோ 11 விண்கலத்தில் நிகழ்வுகளைப் புகைப்படங்கள் எடுக்க ஹேஸல்பால் 500 இ எல் டைப் கேமராக்களைப் பயன்படுத்தி இருந்தனர். இந்த வகைக் கேமராக்களைப் பயன்படுத்திப் புகைப்படங்கள் எடுக்கும் போது அவற்றில் கூட்டல் குறிகள் பதிவாகும். அவை எப்போதுமே புகைப்படத்தில் இருக்கும் ஆப்ஜெக்டுகளின் முன்புறம் தான் பதிவாக வேண்டும். ஆனால், அப்பல்லோ 11 விண்கலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் அவை புகைப்படத்தில் இருக்கும் பொருட்களின் பின்புறமாகப் பதிவாகியிருந்தன. இம்மாதிரி நிகழவேண்டுமானால் குறிப்பிட்ட அந்த ஆப்ஜெக்டுகள் ஓவர் இம்போஸ் ஆகி இருந்தால் மட்டுமே இப்படி நிகழ வாய்ப்புகள் உண்டு ஆனால் நிலவில் அப்படி நிகழ சாத்தியமே இல்லாத போது இது எப்படி நிகழ்ந்ததென்ற குழப்பமும் ஆராய்ச்சியாளர்களிடையே இன்று வரை நீடிக்கிறது.

இந்நிலையில், 1970ம் ஆண்டு ஆம்ஸ்டிராங் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் ஏரோனாட்டிக்ஸ் பிரிவில் துணை கூடுதல் நிர்வாகியாக நியமிக்கப்பட்டார். ஆனால் அடுத்த ஆண்டே அவர் அந்த பதவியை ராஜினாமா செய்துவிட்டு சின்சினாட்டி பல்கலைக்கழகத்தில் ஏரோஸ்பேஸ் என்ஜினியரிங் பாடம் கற்பிக்க சென்றுவிட்டார். அந்த பல்கலைக்கழகத்தில் அவர் 9 ஆண்டுகள் பணியாற்றி சாதித்த நிறைவு கிடைத்ததும், அவர் லெபனான் அருகே 310 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஒரு பண்ணையை வாங்கி சோளம் பயிரிட்டதுடன், ஆடுகளை வளர்த்தார். புகழ்ச்சியை விரும்பாத அவர் அந்நாட்களில் கேமராவிடம் இருந்து விலகியே இருந்தார். 1976ஆம் ஆண்டில் நாசா நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் பதித்த அரிய வீடியோ ஏலத்தில் விட்டது. ஆயிரத்து 100 படச்சுருள்கள் கொண்ட அந்த வீடியோ பதிவானது, அப்போது வெறும் 218 டாலர்களுக்கு ஏலம் போனது. எந்திர பொறியியல் மாணவராக இருந்த கேரி ஜார்ஜ் (Gary George) என்பவர் அந்தப் படச்சுருளை வாங்கினார்.

கேமராக்களில் படாமல் வாழ்ந்து வந்த ஆம்ஸ்ட்ராங் 1979 ஆம் ஆண்டு கிறைஸ்லர் ஆட்டோமொபைல் விளம்பரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். யு.எஸ். கார் தயாரிப்பாளர் தங்கள் விற்பனையை மேம்படுத்துவதற்கும் உள்நாட்டு பொருளாதாரத்திற்கு தொடர்ந்து பங்களிப்பை அளிக்க விரும்புவதால் அதைச் செய்தேன் என்று ஆம்ஸ்ட்ராங் கூறினார். விளம்பரங்களில் ஆம்ஸ்ட்ராங் என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டது. ஒரு விண்வெளி வீரர் என்று குறிப்பிடப்படவில்லை. 

கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்காவின் மிக உயரிய சிவிலியன் விருதான காங்கிரஸின் தங்க பதக்கத்தை பெற்றார். 

ஆம்ஸ்டிராங் அவரது முதல் மனைவி ஜேனட்டுடன் 38 ஆண்டுகள் வாழ்ந்த பிறகு அவரை விவாகரத்து செய்தார். அதன் பிறகு 1999ம் ஆண்டு கரோல் நைட் என்பவரை மணந்தார். ஜேனட் மூலம் ஆம்ஸ்டிராங்கிற்கு 2 மகன்கள் உள்ளனர்.

நீல் ஆர்ம்ஸ்ட்ராங் மனைவியுடன் "நாசா" குடியிருப்பில் வசித்து வந்தார். 2012-ஆம் ஆண்டு ஆரம்பத்தில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. நாசா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு டாக்டர்கள் இருதய அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரை செய்தனர். இதைத் தொடர்ந்து அவருக்கு இருதய அறுவை சிகிச்சை நடந்தது. தொடர்ந்து குணம் அடைந்த அவர் வீடு திரும்பினார். இந்த நிலையில் நிலவில் காலடி வைத்த முதல் மனிதர் எனும் பெருமைக்குரிய உலகப் புகழ்பெற்ற விண்வெளி வீரர் நீல் ஆர்ம்ஸ்ட்ராங் 82 வயதில் கடந்த 2012ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி காலமானார்.

 

நீல் ஆம்ஸ்ட்ராங் ஆய்வுக்காக நிலவிலிருந்து மண், பாறைகளை சேகரித்து அவற்றை ஒரு பையில் எடுத்து வந்தார். அதில் 500 கிராம் மண், 12 பாறை படிவங்கள் போன்றவை இருந்தன. நிலவில், சுமார் 5 இடங்களில் எடுக்கப்பட்ட இந்த மண் மற்றும் பாறைகள் நினைவு சின்னங்களாக கருதப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே சந்திரனில் இருந்து மண் எடுத்து வரப்பட்ட சிறிய பை 2017-ஆம் ஆண்டு  11 கோடியே 57 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளது. நியூயார்க்கில் உள்ள சோத்பீ மையத்தில் அந்த பை ஏலம் விடப்பட்டது. நினைவு சின்னமாக கருதப்படும் அந்த பையில் சந்திரனில் எடுத்த மண் துகள்கள் உள்ளதால் ஏலம் விடப்பட்டது. இந்திய மதிப்பின் படி 11 கோடியே 57 லட்சம் ரூபாய்க்கு இந்தப் பை ஏலம் போனதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அப்போலோ விண்வெளி கலனில் சென்ற அவர், 1969-ஆம் ஆண்டு  ஜூன் 20ம் தேதி, நிலவில் கால்பதித்தார். 50 ஆண்டுகள் நிறைவுறுவதை ஒட்டி, அமெரிக்காவில் உள்ள விண்வெளி பொருட்கள் அருங்காட்சியகத்தில் நீல் ஆம்ஸ்ட்ராங் சிலை வைக்கப்பட்டுள்ளது. இதை, பொதுமக்கள், விஞ்ஞானிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பார்த்து ரசித்து வருகின்றனர்.

 

News Counter: 
100
Loading...

Saravanan