யார் இந்த நெல் ஜெயராமன்?...

share on:
Classic

விவசாயத்தின் பிதாமகன்கள் எத்தனையோ பேர் இருந்தாலும் அவர்களில் முதன்மையானவராகக் கருதப்படுபவர் நெல் ஜெயராமன்.

நெல் திருவிழாவின் ஆதிபகவன்:
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்த ஆதிரங்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் நெல் ஜெயராமன். நம்மாழ்வாரின் இயற்கை விவசாயத்தால் ஈர்க்கப்பட்ட ஜெயராமன், பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுக்கும் பெரும் முயற்சியில் இறங்கினார்.  இதற்காக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்கும் பயணித்து, நூற்றுக்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களை கண்டுபிடித்து, அதனைக் கொண்டு 2006 முதல் 'நெல் திருவிழா' நடத்தியவர்.

நெல் வகைகளை மீட்டவர்:
நமது நெல்லைக் காப்போம் என்ற இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் இவர். ஒவ்வொரு ஆண்டு நெல் திருவிழாவின்போதும், அதில் பங்கேற்கும் விவசாயிகளுக்கு தலா 2 கிலோ நெல்லை கொடுத்து, அடுத்த ஆண்டு திருவிழாவின்போது 4 கிலோவாக விவசாயிகளிடம் திரும்பப் பெற்று, நெல் வகைகளை மீட்டெடுத்த பெருமைக்குரியவர்.

'நெல் ஜெயராமன்' என பெயர் வரக்காரணம்:
விவசாயம் சார்ந்த கல்லூரி மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளை மேற்கொண்ட ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு சிறந்த ஆலோசகராகவும் இருந்தவர் நெல் ஜெயராமன். இன்று பெருமளவில் வரவேற்பைப் பெற்றுள்ள இயற்கை விவசாயத்திற்கு அடித்தளம் அமைத்தவர்களில் நெல் ஜெயராமனும் ஒருவர். நெல் மீது கொண்ட பற்றால், தன் பெயரையே ’நெல் ஜெயராமன்’ என மாற்றிக்கொண்டவர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வரை 13,762 விவசாயிகளுக்கு 63 வகையாக பாரம்பரிய நெல் விதைகளை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
 

News Counter: 
100
Loading...

admin