'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு..!!

share on:
Classic

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகும் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. 

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் உச்சம் தொட்ட நடிகர் தான் சிவகார்த்திகேயன், இவர் கனா படத்தின் மூலம் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்து, அதிலும் மாபெரும் வெற்றி பெற்றார். இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தயாரிக்கும் 2வது படம் தான் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா.   

இந்த படத்தை  கார்த்திக் வேணுகோபால் இயக்க, சின்னத்திரை பிரபலமான ரியோ ராஜ், ஆர்ஜே விக்னேஷ்காந்த், நாஞ்சில் சம்பத், ராதா ரவி என பலர் நடித்து வருகின்றனர். காமெடி படமாக உருவாகும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில் பல செய்தி தொலைக்காட்சிகளில் பிரேக்கிங் நியூஸ் போடப்பட்டுள்ளது போன்ற போஸ்டர் மிக சுவாரஸ்யமான வகையில் வெளியிட்டுள்ளனர். மேலும் இந்த படத்தை ஜூன் அல்லது ஜூலையில் வெளியீடு செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan