3 பேரின் உயிரை பறித்த மூடநம்பிக்கை..

share on:
Classic

மாதவிடாய் காரணமாக சிறு குடிசையில் தனிமைபடுத்தபட்டிருந்த நேபாளத்தை சேர்ந்த தாய் மற்றும் அவரது இரு மகன்கள், முழிச்சு விடுவதற்கு சிரமப்பட்டு இறந்த செய்தி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

3 உயிர்களை பழிவாங்கிய மூடநம்பிக்கை :

நேபாளில் இன்னும் பல சமுதாயங்களில் மாதவிடாய் என்பது ஒரு புனிதமற்ற விஷயமாகவே பார்க்கப்படுகிறது. இதனால் ஒரு மாதத்தில் அந்த நாட்களில் மட்டும், பெண்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியே அனுப்பப்பட்டு சிறு குடிசைகளில் தனிமைப்படுத்தபடுவது வழக்கம். 2005 ஆம் ஆண்டே இந்த பழக்கம் நேபாளில் தடை செய்யப்பட்டது. என்றாலும் இன்னும் பல இடங்களில் இது பழக்கத்தில் தான் உள்ளது. இன்றைய நவீன உலகில் பல மூடநம்பிக்கைகள் ஒழிக்கபட்ட பின்பும் இன்னும் இது போன்ற மூடநம்பிக்கைகள் மனித உயிர்களை பழி வாங்கும் செய்திகள் அரங்கேறி கொண்டு தான் இருக்கிறது. 

குடிசையில் அடைக்கப்பட்ட தாயும் மகன்களும் :

இந்நிலையில் நேபாளத்தை சேர்ந்த 35 வயது 'அம்பா போஹாரா' என்ற பெண், மாதவிடாய் காரணமாக புஜாரா மாவட்டத்தில் இருக்கும் ஜன்னலற்ற சிறிய குடிசையில் தன் இரு மகன்களுடன் அடைக்கப்பட்டார். அவரது மகன்களுக்கு முறையே 12 மற்றும் 9 வயது ஆகிறது. நேபாளத்தில் கடும் குளிர் நிலவுவதால் குடிசையின் ஒரு ஓரத்தில் நெருப்பு மூட்டிவிட்டு அவரும் அவரது மகன்களும் தூங்க சென்றனர்.

மூச்சு திணறி உயிரிழப்பு :

மறுநாள் அம்பாவின் மாமியார் குடிசையின் கதவை திறந்த போது அவர்கள் மூவரும் இருந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். விசாரணையின் போது அவர்கள் மூவரும் மூச்சு விட சிரம பட்டு இறந்திருக்கலாம் என்று கூறபடுகிறது. அவர்களது போர்வையில் ஆங்காங்கே நெருப்பு பற்றியிருந்தது. மேலும் அம்பாவின் கால்களிலும் தீ காயங்கள் இருந்தது. 'சவ்படி' என்று அழைக்கப்படும் இந்த சடங்கின் படி, மாதவிடாயின் பொது பெண்கள் உணவையோ, மதம் சார்ந்த பொருட்களையோ, ஆண்களையோ,விலங்குகளையோ தொடக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

News Counter: 
100
Loading...

aravind