நேர்கொண்ட பார்வை : 24 மணி நேரத்திற்கு முன்பாகவே 50 லட்சம் பார்வைகளை கடந்த ட்ரைலர்..!!

share on:
Classic

நேர்கொண்ட பார்வை ட்ரையிலர் வெளியாகி ஒரு நாளைக்குள்ளாகவே 50 லட்சம் பார்வைகளை பெற்றுள்ளது. 

இந்தியில் வெளியான பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்காக நேர்கொண்ட பார்வை படம் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி வருகிறது. ஸ்ரீ தேவியின் கணவர் போனி கபூர் தயாரித்து வரும் இப்படத்தில், அமிதாப் பச்சன் கதாபாத்திரத்தில் அஜித் நடித்து வருகிறார். மேலும் ஸ்ரதா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். படம் ஆகஸ்ட் 10ம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில், ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ட்ரையிலர் நேற்று மாலை 6 மணிக்கு வெளியானது. தொடர்ந்து ஒரே மாதிரியான கேரக்டர்களில் அஜித்தை பார்த்த ரசிகர்களுக்கு, இந்த படத்தின் அவரது மாறுபட்ட தோற்றம் உற்சாகத்தை அளித்துள்ளது.

ட்ரையிலர் வெளியாகி 24 மணி நேரத்திற்கு முன்னதாகவே 50 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. மேலும் 6.5 லட்சத்திற்கு அதிகமான லைக்குகளையும் பெற்றுள்ளது. முன்னதாக நேற்று ட்ரையிலர் வெளியாகும் முன்னரே தல ரசிகர்கள் என்ற ஹாஷ்டாக்கை இந்திய அளவில் ட்ரெண்டாக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

News Counter: 
100
Loading...

Ramya