தல படத்தின் தணிக்கை சான்றிதழ் இதோ.....!

share on:
Classic

படத்தின் கடைசி காட்சிகளில் தல தனது நடிப்பால் அசத்தியுள்ளார்

தல ரசிகர்கள் ஆவளுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் வரும் ஆகஸ்ட் 8ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. ஹிந்தியில் அமித்தாபட்சன் மற்றும் டாப்ஸி நடிப்பில் மிகப்பெரிய ஹிட் அடித்த பிங்க் படத்தின் ரீமேக்காக உருவாகி இருக்கும் இப்படத்தில் இயக்குநர் வினோத் முதன்முதலாக அஜித்தை வைத்து இயக்கி உள்ளார். இப்படம் முழுக்க முழுக்க பெண்களை மையப்படுத்திய படம். படத்தின் கடைசி காட்சிகளில் தல தனது நடிப்பால் அசத்தியுள்ளார் என படக்குழுவினர் கூறுகின்றனர். இந்த நிலையில் தணிக்கை சான்றிதழ் பெற அனுப்பப்பட்ட படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இது தல ரசிகர்களுக்கு மேலும் ஒரு மகிழ்ச்சி செய்தியாக அமைந்துள்ளது.

 

News Counter: 
100
Loading...

Ramya