நாட்டின் பாதுகாப்பில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை - மோடி

share on:
Classic

நாட்டின் பாதுகாப்பு விவகாரத்தில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தேனி ஆண்டிப்பட்டியில் நடைபெற உள்ள பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள பிரதமர் மோடி கரிசல்விளக்கு பகுதிக்கு ஹெலிகாப்டர் மூலம் வந்தடைந்தார். அப்போது பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தமிழக மக்களுக்கு எனது அன்பான வணக்கம் என தமிழில் உரையைத் தொடங்கினார். மேலும் நாளை தொடங்குகிற தமிழ் புத்தாண்டிற்கு எனது வாழ்த்துகளை தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், காங்கிரசும், திமுகவும் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என்றும், காங்கிரஸ் ஆட்சியில் இருந்த 60 ஆண்டுகளில் மக்களுக்கு செய்தது அநியாயமும், அநீதியும் மட்டுமே என்றும் குற்றம்சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்திய ராணுவத்தின் வீரத்தை கேள்வி கேட்பதாகவும், ராணுவத்தை அவமதிக்கும் எதிர்கட்சிகளுக்கு நாம் என்ன செய்யப்போகிறோம் என்றும் கேள்வி எழுப்பினார். மேலும் தேச பாதுகாப்பை அரசியலாக்கி ராணுவத்தினரை காங்கிரஸ் அவமதிக்கிறது எனக்கூறிய அவர், நாட்டின் பாதுகாப்பில் சமரசம் கிடையாது என்றும் உறுதிபட தெரிவித்தார்.

News Counter: 
100
Loading...

Ragavan