close
முகப்புTNPSC நேர்காணலை புதிய முறையில் நடத்த திட்டம்...


TNPSC நேர்காணலை புதிய முறையில் நடத்த திட்டம்...

TNPSC நேர்காணலை புதிய முறையில் நடத்த திட்டம்...

டிஎன்பிஎஸ்சி நேர்காணல் தேர்வை நடத்தும் குழுவை குலுக்கல் முறையில் தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. 

டி.என்.பி.எஸ்.சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக பல்வேறு அரசுப் பணிகளுக்கான தேர்வுகள் நடத்தப்படுகின்றன. எழுத்துத் தேர்வுகளுக்குப் பிறகு நேர்காணல் மூலம் சரியான நபர்கள் தேர்தெடுக்கப்படுவது வழக்கமாகும். இந்த நேர்காணல்களை டி.என்.பி.எஸ்.சி தலைவர் உள்ளிட்ட தேர்வாணைய குழு உறுப்பினர்கள் மேற்கொள்வது வழக்கம். 

அதில் இரு குழுக்களாக அவர்கள் பிரிந்து செயல்படுவார்கள். இந்நிலையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக நேர்காணல் நடத்துவதற்கு என புதிய முறை அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி இனி ஒரு குறிப்பிட்ட நேர்காணலை நடத்தவுள்ள தேர்வாணைய குழு உறுப்பினர்கள் குலுக்கல் முறையில் தேர்தெடுக்கப்படுவார்கள் என்றும் டி.என்.பி.எஸ்.சி தலைவர் எந்தக் குழுவில் இடம்பெறுவார் என்பது குலுக்கல் மூலமே தேர்வு செய்யப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் மூலமாக நேர்காணல்களில் வெளிப்படைத்தன்மையை கைக்கொள்ள முடியும் என்று நம்புவதாக டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது.