அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு 

share on:
Classic

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி ராகவன் தலைமையில் உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணையத்தை அமைத்துள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலக புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இதில் குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக வழக்கு தொடரப்பட்டது. இன்று வழக்கை விசாரித்த நீதிபதிகள், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனைத்து சமுதாயத்தை சேர்ந்த 16 பேர் கொண்ட குழுவை அமைத்தது.

இவர்களுக்கு உறுதுணையாக ஓய்வுபெற்ற நீதிபதி ராகவன் தலைமையில் 3 வழக்கறிஞர்களை கொண்ட ஆணையத்தை உயர்நீதிமன்றம் மதுரை கிளை அமைத்துள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியில் யாருக்கும் முதல் மரியாதை வழங்கக்கூடாது என உத்தரவிட்டனர்.

 

News Counter: 
100
Loading...

aravind