புதிய வணிகக் கொள்கையால் பாதிப்பு : வால்மார்ட் நிறுவனம் அறிக்கை..!!

share on:
Classic

இ- காமர்ஸிற்கான இந்தியாவின் புதிய முதலீட்டு விதிகள் பிற்போக்குத்தனமானவை என்றும் வர்த்தக உறவுகளை பாதிக்கும் திறன் கொண்டவையாக உள்ளது எனவும் வால்மார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த பிப்ரவரி 1 முதல் இந்தியா புதிய விதிமுறைகளை அமல்படுத்தியது. இ- காமர்ஸ் விதிமுறைகளில் இருக்கும் வேறுபாடுகளால் புதுடெல்லிக்கும், வாஷிங்டனுக்கும் இடையேயான வர்த்தக உறவுகளில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக வால்மார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த புதிய கொள்கை பிற்போக்குத்தனமானவை  என்று வால்மார்ட் நிறுவனத்தின் மூத்த இயக்குனர் சாரா தோர்ன் ஒரு மின்னஞ்சல் மூலமாக அமெரிக்காவின் வர்த்தக பிரதிநிதி அலுவலகத்தில் தெரிவித்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு வால்மார்ட் நிறுவனமானது  16 பில்லியன் டாலர்களை இ-காமெர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட்டில் முதலீடு செய்தது. இதுவே உலக அளவில் முதலீடு செய்யப்பட்ட மிகப் பெரிய தொகையாகும். 

இந்த புதிய விதிமுறை பிரச்சனைகள் குறித்து ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு வால்மார்ட் நிறுவனம் அளித்த அறிக்கையில் இந்த புதிய வர்த்தக கொள்கையால் வால்மார்ட் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. இது குறித்து ஏற்கனவே யு.எஸ்.டி.ஆருக்கு ஜனவரி மாதம் எழுதிய கடிதத்தில் வால்மார்ட் நிறுவனம் இந்த புதிய விதிமுறைகளை கடைபிடிக்க ஆறு மாதகாலம் வேண்டும் என்று கூறியது. ஆனால் அதற்கு எந்த பதிலும் வராத நிலையில், இதுவரை அந்த நிறுவனம் புதிய விதிமுறைகளை கடைபிடிக்கவில்லை என அமெரிக்க வர்த்தக அமைச்சக அதிகாரி தெரிவித்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது போன்ற பிரச்சனைகளை வால்மார்ட் நிறுவனம் சந்தித்து வந்தாலும் அதன் விற்பனை அதிகரித்து வருவதால் சர்வதேச அளவில் வணிகத்தை மறு சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது வால்மார்ட் நிறுவன பங்குகள் 21 சதவீதம் உயர்ந்துள்ளன. இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்தே எஸ்.அண்ட்.பி 500 க்கு 19 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  
 

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan