அதிகரிக்கும் OTP திருட்டு சம்பவங்கள்...மக்களே உஷார்..!

share on:
Classic

பெங்களூரில் புதிதாக அதிகரித்து வரும் OTP (one-time password) திருட்டு சம்பவங்களுக்கு ஐடி துறையில் உள்ள பலர் பலியாகி, பல லட்ச ரூபாய்களை இழந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது . 
 

ஏமாற்றும் யுக்திகள்:

இதுகுறித்து பெங்களூரு சைபர் க்ரைம் போலீசார் கூறும்போது "பல நேரங்களில் நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியில் இருந்து அழைப்பதாக பேசும் நபர். உங்கள் கிரெடிட் அல்லது டெபிட் கார்டை புதுப்பிக்க வேண்டும் என்று சொல்லி வாங்கி கணக்கு எண் மற்றும் CCV நம்பரை கேட்கின்றனர்.பின்பு உங்கள் மொபைலுக்கு ஒரு மெசேஜ் வந்திருக்கும் என்று OTP நம்பரையும் பெற்றுக்கொண்டு. அழைப்பை துண்டித்து விட்டு அதன் மூலம் பணத்தை சுருட்டி செல்கின்றனர்.

பலியாகும் ஐடி துறையினர் :

இந்த மாதிரியான OTP திருட்டு சம்பவங்களில் ஒன்று பாதிக்கப்பட்டவரை மிரட்டி OTP பின்கள் பறிக்கப்படுகின்றன அல்லது சில சாப்ட்வேர்கள் மூலம் ஒருவரின் கணக்கை பின்தொடர்ந்து OTP, SMS மேசேஜ்களை திருடுகின்றனர். இரண்டு மாதங்களுக்கு முன்பு இதே போன்ற ஒரு வழக்கை சந்தித்தனர் போலீசார். அதுபற்றி போலீஸ் கூறும்போது "முதலில் 5000,10000 என திருட ஆரம்பிதவர்கள் இப்பொது 50,000 தொடங்கி சில லட்சங்கள் வரை திருடி வருகின்றனர். ஆனால் இதுவரை யாரையும் கைது செய்யமுடியவில்லை. முக்கியமாக ஐடி துறையை சேர்ந்த பலர் இதற்கு பலியாடாகி வருகின்றனர்' என்கிறார்.

 

அதிகரிக்கும் கொள்ளை சம்பவங்கள்:  

இந்த OTP திருட்டு என்பது தொழில்நுட்பத்தை தாண்டி பல நேரங்களில் ஒருவரின் நம்பிக்கையை பெறுவதில் மூலமே அதிகம் நடக்கிறது. இன்னும் இந்தியா போன்ற நாடுகளில் பிரைவசி விஷியங்களை பொறுப்புடன் கையாள்வதில்லை என்பதே இதற்கு காரணம். இதை தடுக்க இதுவரை எந்த மென்பொருளும் கண்டுபிடிக்கப்பட வில்லை.மேலும் 2017ல் 880 ஆக இருந்த இந்த மாதிரி OTP திருட்டு சம்பவங்கள், 2018 ஆம் ஆண்டில் 2446 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

News Counter: 
100
Loading...

youtube