ஆந்திரா, சத்தீஸ்கர் மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்

share on:
Classic

ஆந்திரா மற்றும் சத்தீஸ்கர்  மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களாக பா.ஜ.க. தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

ஆந்திரா மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்துக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆந்திரா மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டது முதல், ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலாங்களின் ஆளுநராக நரசிம்மன் இருந்து வருகிறார். தற்போது, ஆந்திர மாநில ஆளுநராக , ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க. தலைவர் பிஸ்வா பூஷண் ஹரிசந்தன் நியமிக்கப்பட்டுள்ளார். 

இதே போல, மத்திய பிரதேச மாநில ஆளுநர் ஆனந்தி பென் படேல், சத்தீஸ்கர் மாநில ஆளுநர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வந்த நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தின் புதிய ஆளுநராக அனுசுயா உகே நியமிக்கப்பட்டுள்ளார். மத்தியபிரதேச மாநில பா.ஜ.க.வின் முக்கிய தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

News Counter: 
100
Loading...

aravind