திருமணக்கோலத்தில் வாக்களித்த புதுமண தம்பதி...

share on:
Classic

காஷ்மீரில் திருமணம் நடந்து முடிந்த அடுத்த நிமிடமே மணக் கோலத்துடன் தம்பதியினர் வாக்களித்து அசத்தியுள்ளனர். 

நாட்டின் பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகள் எத்தனையோ இருந்தாலும் அவற்றில் முதன்மையானதாக பார்க்கப்படுவது ஜம்மு காஷ்மீர் வாக்குச்சாவடிகள் தான். அதுவும், புல்வாமா தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து காஷ்மீர் எல்லையில் பதற்றக் கனல் அதிகரித்த வண்ணமிருந்தது. இந்த நிலையில், மக்களவை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கிய நிலையில் ஜம்மு காஷ்மீரில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். இதனொரு பகுதியாக, உதாம்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் புதுமண தம்பதி ஒன்று மணக்கோலத்துடன் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றினர். தங்களுக்கு திருமணம் நடந்து முடிந்த அடுத்த நிமிடமே வாக்குச்சாவடிக்கு சென்று தங்களது வாக்குகளை இவர்கள் பதிவு செய்தனர். 

News Counter: 
100
Loading...

mayakumar