புதிய தலைமுறை காரான மாருதி சுஸுகி வேகன் ஆர் வெளியாகும் தேதி அறிவிப்பு

Classic

அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட மாருதி சுஸுகியின் நீண்ட கால உற்பத்தியின் முக்கியமான கார்களில் ஒன்றான மாருதி சுஸுகி ஆர் வரும் ஜனவரி 23-ம் தேதி  வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காரின் மாடல் மற்றும் அமைப்பு ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் கசிந்தன.இருப்பினும் அதன் ஹேட்ச் பேக் மற்றும் உட்புற வடிவமைப்பு குறித்த தகவல்கள் இதுவரை ரகசியமாகவே உள்ளது.

வடிவமைப்பு : 

புதிய வேகன் ஆர் கார் 3,655 மிமீ நீளமும் , 1620 மிமீ அகலமும், 1675 மிமீ உயரமும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய தலைமுறை கார் என்பதை வெளிக்கொணரும் வகையில் புதிய ஹெட்லைட் , பம்பர் டிசைனில் மாற்றம்  போன்றவற்றை செய்துள்ளது. தொடர்ந்து டால் பாய் டிசைனிலேயே வெளிவரவிருக்கும் இந்த காரின் மேற்கூரை எர்டிகாவை போலவும் வடிவமைக்கப்பட்டு ஒட்டுமொத்தத்தில்சரியான வடிவமைப்பை பெற்றுள்ளது.தொடுதிரை வசதியுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் அப்ஹோல்ஸ்ட்ரியம் உயரமானதாக உள்ளபடி வடிவமைக்கப்பட்டுள்ளது.இரண்டாம் வரிசையில் இருப்பவர்களுக்கு கூடுதல் இடவசதி இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

செயல்திறன் : 

புதிய வேகன் ஆர் காரில் 3 சிலிண்டர்கள் கொண்ட 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் தொடர்ந்து தக்க வைக்கப்பட்டும். இந்த என்ஜின் அதிகபட்சமாக 67Bhp பவரயும்,90 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.5 ஸ்பீட் மேனுவல் கியர் பாக்ஸ் அல்லது AMT (Automated Manual Transmission)கியர் பாக்ஸிலும் இந்த மாடல் வெளிவரவிருக்கிறது. 

பாதுகாப்பு : 

புதிய கிராஷ் டெஸ்ட் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு தரம் உயர்த்தப்பட்டுள்ளது.இதனுடன் டூயல் ஏர் பாக்குகள்,ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம்,அதிவேகம் குறித்த எச்சரிக்கை,ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் போன்றவை முக்கிய பாதுகாப்பு அம்சங்கங்களாக இடம் பெறுகின்றன.

விலை : 

ரூ.4.5 லட்சம் முதல் ரூ 6.5 லட்சம் (ex-showroom) வரை இதன் விலை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.நடுத்தர குடும்பவாசிகளை கவரும் வகையில் சான்ட்ரோ , போன்ற கார்களுக்கு போட்டியாக புதிய தலைமுறை மாருதி சுஸுகி வேகன் ஆர் அமையும்.

 

News Counter: 
100
Loading...

youtube