ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு புதிய செயலி அறிமுகம்..!

share on:
Classic

சென்னை தி.நகரில் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பயன்படும் விதமாக புதிய செல்போன் செயலி அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.

அரும்பு அறக்கட்டளை சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சியில் ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பயன்படும் வகையில் அரும்பு மொழி என்ற செல்போன் செயலியை கர்நாடக இசைப் பாடகி சவுமியா வெளியிட்டார். அதைத் தொடர்ந்து ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தையை பத்தாண்டுகளாக வளர்த்த தாய் ஒருவர் எழுதிய ''எழுதா பயணம்" என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. இதனை தமிழ்நாடு போக்குவரத்து துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் அரும்பு அறக்கட்டளை உறுப்பினர்கள் மற்றும் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஏற்கனவே செல்போன் செயலிகள் இருந்தாலும் அவை பணம் கொடுத்து வாங்கும் நிலையில் இருக்கிறது. இன்று வெளியிட்டுள்ள அரும்பு மொழி என்ற செயலி இலவசமாக பிளே ஸ்டோரிலிருந்து யார் வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan