முதல்முறையாக நம் கேலக்ஸிக்கு வெளியே புதிய கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube
close
முகப்புமுதல்முறையாக நம் கேலக்ஸிக்கு வெளியே புதிய கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

முதல்முறையாக நம் கேலக்ஸிக்கு வெளியே புதிய கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

முதல்முறையாக நம் கேலக்ஸிக்கு வெளியே புதிய கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் பூமி இருக்கும் கேலக்ஸியில் பல புதிய கோள்களை கண்டுபிடித்து வந்தனர். தற்போது முதன் முறையாக நாம் வாழும் கேலக்ஸிக்கு வெளியே புதிய கோள்களை கண்டுபிடித்துள்ளனர். 

ஒக்லஹோமா பல்கலைகழகத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் மைக்ரோ லென்சிங் (Micro-lensing) என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இதனை கண்டுபிடித்துள்ளனர். இந்த கோள்கள் அமைந்துள்ள கேலக்ஸி 3.8 பில்லியன் ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது.  இந்த கோள்களின் உருவளவு நிலா மற்றும் வியாழன் அளவை ஒத்துள்ளது எனவும் தெரிவித்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.

மைக்ரோ லென்சிங் மட்டுமே இதுபோன்ற தொலைதூர கோள்களை கண்டுபிடிக்க சிறந்த தொழில்நுட்பம். இது ஐன்ஸ்டீன் கோட்பாட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. ஆனால் , இதுவரை நம் கேலக்சியில் உள்ள கோள்கள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டது.  கேலக்ஸியின் நட்சத்திரத்திற்கும் , கோளிற்கும் நடுவே செல்லும் ஒளிப்பாதையில் , புதிய பொருளை (தட்டு) அறிமுகப்படுத்தினால் , புவி ஈர்ப்பு விசையால் பூமியின் திசையை நோக்கி ஒளியின் பாதையை மாற்றும் . அதன்மூலம் , கோள்கள் இருப்பதை அறிந்துகொள்ள முடியும்.  இதுவரை சூரிய குடும்பத்திற்கு வெளியே 53 கோள்கள் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.