தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கென பிரத்யேக தொலைக்காட்சி சேனல் விரைவில் துவக்கம்

Classic

பள்ளிக்கல்வித்துறைக்கென பிரத்யேக தொலைக்காட்சி சேவை வரும் ஜனவரி 21-ல் துவங்கப்பட உள்ளது.

தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தும் வகையில், பள்ளிக் கல்வித்துறைக்கென பிரத்யேக தொலைக்காட்சி சேவை வரும் ஜனவரி 21ம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொலைக்காட்சி சேனலின் ஸ்டூடியோ, கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கட்டடத்தில் செயல்பட உள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதனை தொடங்கி வைக்க உள்ளதாக கூறப்படுகிறது. குறளின் குரல், குருவே துணை, வல்லது அரசு என்ற தலைப்பில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் பேட்டி, கல்வித்துறை செயல்பாடுகள், கல்வித்துறையில் அளிக்கப்படும் மானியங்கள், கல்வித்துறை நலத்திட்டங்கள் ஆகியவை இடம்பெறுகின்றன.

News Counter: 
100
Loading...

sasikanth