தளபதி 64 -ன் புதிய அப்டேட் : விஜய்யுடன் ஜோடி சேர்கிறாரா ராஷ்மிகா..?

share on:
Classic

விஜய்யின் தளபதி 64 படத்தில் அவருடன் ராஷ்மிகா மந்தனா ஜோடி சேர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தெலுங்கில் வெளியான கீதகோவிந்தம் படத்திற்கு பிறகு தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார் ராஷ்மிகா. தென்னிந்தியாவின் பிசியான ஹீரோயின்களில் ஒருவராக வலம் வரும் அவர் மீண்டும் விஜய் தேவர்கொண்டாவுடன் டியர் காம்ரேட் என்ற படத்தில் இணைந்து நடித்து வருகிறார். விரைவில் அந்தப்படம் திரைக்கு வர உள்ள நிலையில் ராஷ்மிகா, விஜய்யின் தளபதி 64 படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. தற்போது விஜய், அட்லி இயக்கத்தில் உருவாகும் தளபதி 63-ல் பிசியாக உள்ளார். இப்படம் வரும் தீபாளிக்கு திரைக்கு வர உள்ளது.

இதனிடையே மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ், விஜய்யின் அடுத்த படத்தை இயக்குவார் என்ற தகவல்கள் ஊடகங்களில் பரவியது. அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், ராஷ்மிகா இப்படத்தில் இணைய உள்ளதாக வதந்திகள் பரவி வருகின்றன. ராஷ்மிகா, விஜய் குறித்த வதந்திகள் பரவுவது இது முதன்முறை அல்ல. தளபதி 63 படத்தின் தொடக்க பணிகள் போதும் அப்படத்தில் அவர் நடிக்க உள்ளார் என்ற தகவல் பரவியது. அந்த தகவலை மறுத்த ராஷ்மிகா, இம்முறை அவருடன் நடிக்கவில்லை எனவும், விரைவில் அவர் படித்தில் நடிப்பேன் என்ற நம்பிக்கை உள்ளதாக தெரிவித்தார். பின்னர் விஜய் 63-ல் நயன்தாரா நடிப்பதாக தகவல் வெளியானது. எனினும் தற்போது ராஷ்மிகா குறித்து வெளியான தகவல் உண்மையா அல்லது வதந்தியா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

News Counter: 
100
Loading...

Ramya