புதிய எழுச்சியையும், வளர்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் : முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து..!

share on:
Classic

தமிழ்ப் புத்தாண்டையொட்டி, முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "தரணி யெங்கும் இணையிலா உன் சரிதை கொண்டு செல்லடா!" என்ற நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளையின் பாடல் வரிகளுக்கேற்ப, ஈடில்லா பெருமைமிக்க வரலாற்றை கொண்ட தமிழ் பெருமக்கள், சித்திரைத் திங்கள் முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக பன்னெடுங்காலமாக கொண்டாடி மகிழ்வதாகத் தெரிவித்துள்ளார். இந்த இனிய புத்தாண்டு, தமிழர்களின் வாழ்வில் புதிய எழுச்சியையும், வளர்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் என்று வாழ்த்தி, உலகெங்கும் வாழும் தமிழ் பெருமக்கள் அனைவருக்கும் உளப்பூர்வமான தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

News Counter: 
100
Loading...

vinoth