நியூசிலாந்து vs இந்தியா.. 50 ஓவர் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி..!!

share on:
Classic

உலக்கோப்பை தொடருக்கு தயாராகும் விதமாக நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற 50 ஓவர் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் மே 30 ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இதற்கு தயாராகும் விதமாக லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்துடன் இந்திய அணி மோதியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் ரோஹித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனிடையே, நியூசிலாந்தின் துல்லிய பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் இந்திய அணி திணறியது. இதனால் இந்திய அணி 39வது ஓவரிலேயே அனைத்து விக்கெட்களை இழந்து வெறும் 179 ரன்களில் சுருண்டது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 37வது ஓவரில் 4 விக்கெட்களை மட்டுமே இழந்து வெற்றிபெற்றது. அதிகபட்சமாக நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் 67 ரன்களும் ராஸ் டெய்லர் 71 ரன்களும் விளாசினர்.

News Counter: 
100
Loading...

vinoth