இந்திய அணிக்கு 220 ரன்கள் வெற்றி இலக்கு... நியூஸிலாந்து பேட்ஸ்மேன்கள் அபாரம்

share on:
Classic

வெலிங்டன் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு 220 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ததால் நியூஸிலாந்து அணி பேட்டிங்கை தொடங்கியது. ’பவுன்ஸ் பேக்’ என்ற வார்த்தைக்கு அர்த்தம் புரிய வைக்கும்படி நியூஸிலாந்து பேட்ஸ்மேன்கள் பின்னிப்பெடலெடுத்தனர். அணியின் ஸ்கோர் 86-ஆக இருந்தபோது மன்ரோ 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த முதலாவது விக்கெட்டை வீழ்த்துவதற்குள் விழி பிதுங்கு போயினர் நமது இந்திய பவுலர்கள். 

மறுபுறம், இந்திய பவுலர்களின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்துக்கொண்டிருந்த செய்ஃபெர்ட் 43 பந்துகளில் 6 சிக்சர்கள், 7 பவுண்டரிகளுடன் 84 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். இவரைத்தொடர்ந்து மிட்சல் 8 ரன்களிலும், கேப்டன் வில்லியம்சன் 34 ரன்களிலும், கிரான்டோம் 3 ரன்களிலும், டேலர் 23 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். நியூஸிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 219 ரன்கள் குவித்தது. இந்திய பவுலிங் தரப்பில் ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, சாஹல், குருனால் பாண்ட்யா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 220 ரன்கள் என்ற கடினமான வெற்றி இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்குகிறது. 

News Counter: 
100
Loading...

mayakumar