தோனி ஓய்வு பெற உள்ளார் என்ற செய்தி உண்மையா..?

share on:
Classic

தோனி ஒய்வு பெற உள்ளதாக பரவி வரும் வதந்தியில் எந்த உண்மையும் இல்லை என இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுத் தலைவர் எம்எஸ்கே பிரசாத் கருத்து தெரிவித்துள்ளார்.

2019 உலகக்கோப்பை முடிந்த பின் தோனி ஓய்வு பெற உள்ளார் என்ற செய்தி பரவிய போது கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு தோனி ரசிகர்கள், ட்விட்டரில்,தோனி ஓய்வு பெற வேண்டாம் என வேண்டுகோள் வைத்து வந்தனர்.

உலகக்கோப்பை தொடருக்கு பின் நடந்த வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முன் தான் இரண்டு மாத காலம் ஓய்வில் செல்வதாக பிசிசிஐ-யிடம் கூறி விட்டு இரு வாரங்கள் இந்திய இராணுவத்துடன் பயிற்சியில் ஈடுபட்டார். அடுத்து நடைபெற உள்ள தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் தோனி இடம் பிடிப்பார் என கருதப்பட்ட நிலையில் அவருக்கு அணியில் இடம் அளிக்கப்படவில்லை.

இந்நிலையில் "நான் என்றுமே மறக்க முடியாத இரவு. என் உடற்பயிற்சி சோதனையில் எப்படி ஓடுவேனோ அப்படி ஓட வைத்துவிட்டார் தோனி" என்று தோனியுடன் விளையாடிய புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார் இந்திய அணி கேப்டன் விராட்.

இந்த ட்விட்டை தொடர்ந்து தோனியின் ரசிகர்கள் பலரும் தோனி நீங்கள் கிரிக்கெட்டில் இருந்து விலகாதீர்கள் எனவும், மேலும் அதை ஏற்றுக்கொள்ள நாங்கள் தயாராக இல்லை என்பது போலவும் தொடர்ந்து தங்கள் கருத்துக்களை ட்விட்டரில் #Dhoni என்ற ஹெஸ்டேகில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தோனி இன்று இரவு செய்தியாளர்களை சந்தித்து கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெள்வந்த வண்ணம் இருந்தன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுத் தலைவர் எம்எஸ்கே பிரசாத் தோனி ஓய்வு பெறுகிறார் என்று வரும் செய்திகளில் உண்மையில்லை என கருத்து தெரிவித்துள்ளார். அதனை மெய்பிக்கும் வகையில் தோனியின் மனைவி சாக்‌ஷி தனது ட்விட்ட்ரில் இது வதந்தி என போஸ்ட் பதிவிட்டுள்ளார்.

News Counter: 
100
Loading...

Saravanan