பொதுச் செயலாளர் ஆனார் அடுத்த இந்திரா காந்தி..!!

share on:
Classic

கிழக்கு உ.பி. காங்கிரஸ் பொதுச் செயலாளர் பொறுப்பை ஏற்றார் பிரியங்கா காந்தி. மேலும் கணவருக்கு ஆதரவாக எப்போதும் இருப்பேன் என்று கூறியுள்ளார்.

கிழக்கு உத்தர பிரதேச காங்கிரஸ் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்தி இன்று தனது பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இதற்காக டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்திற்கு வந்த பிரியங்காவிற்கு அந்த கட்சியின் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் தனது அறைக்கு சென்று அவர் பணிகளை தொடங்கினார். மாநில நிர்வாகிகளிடம் சிறிது நேரம் ஆலோசனை நடத்திய பின்பு அவர் புறப்பட்டு சென்றார். அப்போது, ராபர்ட் வதேரா விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த பிரியங்கா காந்தி, தற்போது நடந்து கொண்டிருப்பதை உலகம் பார்த்து கொண்டுள்ளதாகவும், தனது கணவருக்கு ஆதரவாக எப்போதும் இருப்பேன் என்றும் கூறினார்.

 

News Counter: 
100
Loading...

aravind