யூடியூப்பில் சாதனை படைத்த என்.ஜி.கேயின் ’தண்டல் காரன்’ பாடல்..!!

share on:
Classic

என்.ஜி.கே படத்தின் சிங்கள் டிராக்கிற்கு கிடைத்த ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று யூடியூபிள் 2-ஆம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.

சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிருக்கும் படம் தான் என் ஜி கே. இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதுடன் அரசியல் களத்தில்  சிறிது சலசலப்பையும் ஏற்படுத்திருந்தது. என் ஜி கே படத்தில் சூர்யாவை தவிர்த்து சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங், பொன்வண்ணன், குரு சோமசுந்தரம் போன்ற பல நடிகர்கள் நடித்துள்ளனர்.  யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளனர்.

என் ஜி கே படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் முதல் சிங்கிள் ட்ராக் ஆன தண்டல்க்காரன் பாடல் சமீபத்தில் வெளியாகியிருந்தது. வெகு நாட்களுக்கு பிறகு செல்வராகவன் யுவன் காம்போவில் வெளிவந்துருக்கும் இந்த பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது மட்டுமில்லாமல் யூடியூபில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. இந்த தகவலை டுவிட்டர் பக்கத்தில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பகிர்ந்தது மட்டுமில்லாமல் ரசிகர்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.  மேலும் இந்த என் ஜி கே படம் வரும் மே31 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
 

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan