நீலகிரி : அத்தியாவசிய பொருட்களின் விலை 3 மடங்காக உயர்வு..!

share on:
Classic

நீலகிரி மாவட்டத்துக்குள் பகல் நேரத்தில் லாரிகள் சென்று வர தடை விதிக்கப்பட்டுள்ளதால், அத்தியாவசிய பொருட்களின் விலை 3 மடங்காக உயர்ந்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசனையொட்டி, சுற்றுலா வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால், மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால், பகல் நேரத்தில் லாரிகள் சென்று வர மாவட்ட காவல்துறை தடை விதித்துள்ளது. இதனால், நீலகிரிக்கு வரக்கூடிய அத்தியாவசிய பொருட்களான காய்கள், கட்டுமானப் பொருட்கள், கல்லாறு பகுதியில் காலை முதல் நீண்ட வரிசையில் நிறுத்தி வைக்கப்படுகின்றன.

நீலகிரியில் இருந்து எடுத்துச்செல்லப்படும் காய்கறிகளும், சமவெளியில் இருந்து கொண்டுவரப்படும் காய்கறிகளும், நாள் முழுவதும் வெயிலில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், காய்கறிகள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதுடன், காய்கறிகளின் விலை 3 மடங்காக அதிகரித்துள்ளது. விலைவாசி உயர்வால் பொதுமக்களும், வியாபாரிகளும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

News Counter: 
100
Loading...

Ragavan