நிரவ் மோடியின் ஜாமின் மனு : லண்டன் உயர்நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு..

share on:
Classic

நிரவ் மோடி ஜாமின் மனு மீது லண்டன் உயர்நீதிமன்றம் இன்று தீரப்பு வழங்க உள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன்வாங்கி மோசடியில் ஈடுபட்ட இந்திய வைர வியாபாரி நிரவ்மோடி, லண்டன் போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து, அவரை இந்தியாவிற்கு கொண்டு வரும் முயற்சியில் அமலாக்கத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், லண்டன் சிறையில் அடைக்கப்பட்ட நிரவ் மோடி, லண்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் 3 முறை ஜாமின் மனு தாக்கல் செய்தார். நிரவ் மோடிக்கு ஜாமின் வழங்கினால் அவர் வெளிநாடுகளுக்கு தப்பி சென்று விடலாம் என இந்த மனு 3 முறையும் நிராகரிக்கப்பட்டது.

இதையடுத்து, 4-வது முறையாக நிரவ் மோடி சார்பில் லண்டன் உயர்நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது. நிரவ் மோடியின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளதால், அவர் வெளிநாடுகளுக்கு தப்பி செல்ல வாய்ப்பில்லை என நிர்வமோடி சார்பில் லண்டன் உயர்நீதிமன்றத்தில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த ஜாமின் மனு மீது லண்டன் உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan