அல்வா கிண்டி கொடுத்தார் நிர்மலா சீதாராமன்..!

share on:
Classic

பட்ஜெட் அறிக்கை அச்சிடுவதற்கு முன்பாக நடத்தப்படும் அல்வா தயார் செய்யும் நிகழ்ச்சி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தலைமையில் நடைபெற்றது.

நாடாளுமன்றத்தில் ஆண்டுதோறும் பட்ஜெட் அறிக்கை தயார் செய்வதற்கு முன்பாக அல்வா கிண்டி அனைவருக்கும் வழங்குவது வழக்கம். அதன்படி வரும் ஜூலை 5-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் பட்ஜெட் அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்யவுள்ளார். அதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், நிதியமைச்சகத்தில், பட்ஜெட் அறிக்கை அச்சிடுவதற்கு முன்பாக நடத்தப்படும் அல்வா தயார் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அனைவருக்கும் அல்வாவை வழங்கினார். பாஜக தலைமையிலான அரசு 2-வது முறையாக பொறுப்பேற்று தாக்கல் செய்யவுள்ள முதல் பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.

News Counter: 
100
Loading...

Ragavan