வாக்குப்பதிவு இயந்திரத்தில் பட்டன் இல்லை என்று புகார் : வாக்குப்பதிவு நிறுத்தம்..!!

share on:
Classic

வாக்குப்பதிவு இயந்திரத்தில் பரிசுப்பெட்டி சின்னத்திற்கு பக்கத்தில் பட்டன் இல்லாததால் கடலூரில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு காலை முதல் நடைபெற்று வருகிறது. காலை முதலே பொதுமக்கள், திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என அனைத்து தரப்பினரும் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். ஒரு சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் தாமதமாகவும் தேர்தல் தொடங்கியது. 

இந்நிலையில் கடலூர் தொகுதிக்குட்பட்ட திருவதிகை வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பட்டன் இல்லை என்று அக்கட்சியினர் புகார் தெரிவித்தனர். அமமுகவின் பரிசுப்பெட்டி சின்னத்திற்கு பக்கத்தில் பட்டன் இல்லாதால் அங்கு வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இதற்கு மாற்று ஏற்பாடு செய்யப்படும் என்று அங்குள்ள தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் கேட்ட போது, புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

News Counter: 
100
Loading...

Ramya