சபாநாயகர் தனபாலுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்...

share on:
Classic

சபாநாயகர் தனபால் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் வரும் கூட்டத் தொடரில் எடுத்துக்கொள்ளபடவுள்ளது.

கடந்த 2017-ஆம் ஆண்டு ஆளும் கட்சிக்கு ஆதரவான நிலையில் ஜனநாயக மாண்புக்கு எதிராக செயல்படுவதாக குற்றம்சாட்டி எதிர்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்தனர். இந்த தீர்மானம் தோல்வி அடைந்த நிலையில், வாக்கெடுப்பின் போது ஓபிஎஸ் அணியை சேர்ந்த 11 பேர் பங்கேற்கவில்லை. இந்த சூழலில் 2-வது முறையாக கடந்த ஏப்ரல் மாதம், தினகரன் அணியை சேர்ந்த 3 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார்.

ஆனால் சபாநாயகர், நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது அரசுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் அணியை சேர்ந்த 11 பேருக்கு சபாநாயகருக்கு ஏன் நோட்டீஸ் அனுப்பவில்லை என்று திமுக கேள்வி எழுப்பியது. மேலும், சபாநாயகருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் முன்மொழிந்தார். இந்த தீர்மானம் வரும் ஜூன் 28-ஆம் தேதி தொடங்க உள்ள சட்டப்பேரவை கூட்டத்தில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan