ரஜினி கட்சி ஆரம்பிக்கும் வரை கடன் கிடையாது..பெட்டிக்கடையில் வைக்கப்பட்ட அறிவிப்பு பலகை..!

Classic

சென்னையில் ஒரு பெட்டிக்கடையில் வைத்துள்ள அறிவிப்பு பலகை வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.

ரஜினி அரசியலுக்கு வருவேன் என்று அறிவித்து ஒரு ஆண்டு நிறைவடைய போகும் நிலையில் புதிய சேனல் தொடங்க போவதாக செய்திகள் வெளிவருகின்றன. இந்நிலையில் அவரை கலாய்த்து நிறைய மீம்கள் சமூக வளையதளங்களில் பரவி வருகின்றன. இருப்பினும் இதனை பொருட்படுத்தாது தனது பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார் ரஜினி. ஒரு பக்கம் அரசியல் ஒரு பக்கம் படங்கள் என பிசியாக உள்ளார். 

அரசியலுக்கு வருவேன் என்று அறிவித்தும் தனது கட்சி பெயரையோ அது சம்மந்தப்பட்ட எந்த செய்தியையோ இன்னும் அவர் அறிவிக்கவில்லை. இந்நிலையில் சென்னையில் ஒரு பெட்டிக்கடையில் 'ரஜினி கட்சி ஆரம்பிக்கும் வரை கடன் கிடையாது' என்று அறிவிப்பு பலகை வைத்து வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார் கடை உரிமையாளர்.

News Counter: 
100
Loading...

aravind