’அச்சமில்லை அச்சமில்லை’ பட டீசரை பார்த்து பாராட்டிய கமல்..!!

share on:
Classic

நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ள அச்சமில்லை அச்சமில்லை படத்தின் டீசரை பார்த்து கமல் பாராட்டியுள்ளார். 

தமிழ் சினிமாவில் மௌணம் பேசியதே படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனவர் தான் அமீர். பல சிறந்த படங்களில் இயக்கியிருக்கும் இவர் இப்போது சமீப காலமாக சில படங்களில் நடித்து வருகிறார்.  கடைசியாக வடசென்னை படத்தில் நடிச்சிருந்த அமீருக்கு அந்த படம் சிறந்த நடிகன் என்ற அந்தஸ்தை பெற்று தந்தது.  அமீர், முத்து கோபால் இயக்கத்தில் உருவாகி வரும் படமான அச்சமில்லை அச்சமில்லை படத்தை தயாரித்து நடித்திருந்தார். 

அச்சமில்லை அச்சமில்லை படத்தின் டீசர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகி அரசியல் காலத்தில் சலசலப்பை ஏற்படுத்திருந்தது.  இயக்குனர் அமீருக்கு இப்போது தமிழ் சினிமாவில் நல்ல மார்க்கெட்  இருப்பதால் இப்போது இந்த படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.  இந்த நிலையில் அச்சமில்லை அச்சமில்லை படத்தின் டீசரை நடிகர் தனுஷ் வெளியிட்டுருந்தார்.  

இந்த டீசரை பார்த்த நடிகர் கமல் ஹாசன் , “அச்சமில்லை அச்சமில்லை படக்குழுவை பாராட்டியது மட்டுமில்லாமல் இந்த படத்தை எடுப்பதற்கே ஒரு துணிச்சல் வேண்டும்” என பேசியுள்ளார்.  இந்த  பேட்டியும் அந்த டீசரில் இடம்பெற்றுள்ளது.  அச்சமில்லை அச்சமில்லை படம் விவசாயிகளின் பிரச்னை, மணல் கொள்ளை, டாஸ்மாக் என பல பிரச்னைகளை மையமாக எடுக்கப்பட்டுள்ளது.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan