"நியூட்ரினோ ஆய்வகத்தால் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது"

share on:
Classic

தேனி மாவட்டம் பொட்டிப்புரத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் தேனி மாவட்டத்தில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில், பொட்டிபுரம் கிராமம் அருகே, நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டது. இந்த திட்டத்துக்கு, மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கியதை தொடர்ந்து, தமிழக அரசும் ஒப்புதல் தந்துள்ளது. 

இந்நிலையில், மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு அமைச்சர் ஜிதேந்திரசிங் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில், தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில், இந்தியாவில் முதல்முறையாக நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு ஒப்பதல் அளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூட்ரினோ ஆய்வகத்தால் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும், கதிர்வீச்சு அபாயமும் ஏற்படாது எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

 

News Counter: 
100
Loading...

aravind